பிடிபட்ட சீனப் படகை ஜோக்கோ பார்வையிடுவார்

பிடிபட்ட சீனப் படகை ஜோக்கோ பார்வையிடுவார்

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பிடிபட்ட சீனாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நேரில் சென்று பார்வையிட இருப்பதாக மாநில அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தோனீசியாவின் நட்டுனா தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதி குறித்த அதன் உரிமையை விட்டுக்கொடுக்காது என்று இந்தோனீசிய துணை அதிபர் காலா ஒரு பேட்டியில் கூறிய சில நாட்களில் அதிபர் ஜோக்கோ விடோடோ அந்தப் படகை பார்வையிடவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதிபரும் அவரது குழுவின ரும் இன்று ரானாய் கடற்படைத் தளத்திற்கு செல்லவிருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தோனீசியாவின் கடல் பகுதியில் சீனாவின் மீன்பிடிப் படகு அத்துமீறி நுழைந்ததாக இந்தோனீசிய அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நட்டுனா தீவுகளுக்கு அருகே சட்டவிரோதமாக மீன்பிடித்த சீனாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகை இந்தோனீசிய கடற் படையினர் வழிமறித்து அப் படகை இழுத்துச் சென்றனர். அப்படகில் இருந்த 7 சிப்பந்தி களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

சீனப் படகு இந்தோனீசிய கடல் பகுதியில் அத்துமீறி நுழையவில்லை என்றும் தென்சீனக் கடல் பகுதியில்தான் அப்படகு சென்றுகொண்டிருந் தது என்றும் சீனா கூறியுள்ளது. இதனால் பிடிபட்ட படகையும் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது. விசாரணைக்காகவே படகு சிப்பந்திகளை தடுத்து வைத் துள்ளதாக இந்தோனீசியா கூறி யுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து சீனப் படகு சம்பந்தப்பட்ட இத்தகைய சம்பவங்கள் நடப்பது இது மூன்றாவது முறையாகும். தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா, அதன் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் அதன் ராணுவ நடமாட்டத்தையும் கண்காணிப்பு நடவடிக்கை களையும் அதிகரித்துள்ளது. இதனால் சீனாவுக்கும் அந்தக் கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடும் மற்ற நாடு களுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. இந்தப் பிரச்சினை யில் இந்தோனீசியா ஈடுபட வில்லை என்ற போதிலும் நட்டுனா தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகள் மீன் பிடிப்பதற்கு உரிமை இருப்பதாக சீனா கடந்த மார்ச் மாதம் அறிவித்தது முதல் அதுகுறித்து இந்தோனீசியா அதன் கவலையை வெளிப்படுத்தியது.