தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரியாவின் இரு ஏவுகணை சோதனை

1 mins read

வா‌ஷிங்டன்: ஐநா தடையையும் மீறி வடகொரியா நேற்று சக்தி வாய்ந்த இரு ஏவுகணைகளை சோதனை செய்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித் துள்ளது. வடகொரியாவின் இத்தகைய சினமூட்டும் செயல்களால் அந்நாடு இன்னும் பல சிரமங் களை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. தென்கொரியாவும் அதன் சினத்தை வெளிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இத்தகைய செயல்கள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்று தென்கொரியா தெரிவித் துள்ளது. வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஆற்றல் மிக்க இரு நடுத்தர ஏவுகணைகளை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் செலுத்தி சோதனை மேற்கொண்டது. வட கொரியா மூன்று மாதங்களில் இத்தகைய 6 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. வட கொரியா மீது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஏற்கெனவே பல தடைகளை விதித்துள்ளன.