சாபாவிலுள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ஏடிஎம்) அமைந்துள்ள அறையின் கண்ணாடிக் கதவுகள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 4.20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வளாகத்தில் வெடிச் சத்தம் கேட்டதாக அப்பகுதியில் இருந்தோர் கூறியுள்ளனர். சென்ற மாதம் 12ஆம் தேதி மூன்று திருடர்கள் மெம்பாகுட் நகரில் உள்ள ஏடிஎம் வளாகத்தையும் வெடி வைத்துத் தகர்த்து 70,000 மலேசிய ரிங்கிட்டுகளைக் கொள்ளையிட்டனர். அதிகாலை 1.20 மணியளவில் நடந்த அச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கறுப்பு நிற ஹோண்டா சிஆர்வி வாகனத்தில் சென்றதாகக் கூறப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்
ஏடிஎம் வளாகங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு, 2 இடங்களில் கொள்ளை
1 mins read
-

