சோமாலியாவில் தாக்குதல்: 15 பேர் மரணம்

சோமாலியாவில் தாக்குதல்: 15 பேர் மரணம்

1 mins read
d1bb8bf6-bd0f-4106-a27b-35e5a98106e5
-

மொகாடி‌ஷு: சோமாலியத் தலை நகர் மொகாடி‌ஷுவில் உள்ள ஹோட்டலில் பயங்கரவாத அமைப்பான அல் ஷபாப் தாக்குதல் நடத்தியதில் குறைந் தது 15 பேர் மாண்டதாக அந்நாட்டு போலிசார் தெரிவித் துள்ளனர். தாக்குதலில் பலர் காயமுற்றனர் மொகாடி‌ஷுவின் மையப் பகுதியில் உள்ள நாசா ஹப்லோட் ஹோட்டலில் முதலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயங்கர வாதிகள் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் மாண்டவர்களில் பொதுமக்கள், பயங்கரவாதிகள், ஹோட்டல் பாதுகாவலர்கள் ஆகியோரும் அடங்குவர்.

ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கர வாதிகளுக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த கடுமையான சண்டை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதி களைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோது ஹோட்டலில் இருந்த சிலர் புறவாசல் வழி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், மொகாடி‌ஷுவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரி வித்துள்ளது.

தாக்குதலில் மாண்டவர்களைப் பார்வையிடும் சோமாலிய ராணுவ வீரர்கள். 15 பேர் மரணமடைந்ததுடன் ஏறத்தாழ 20 பேர் காயமுற்றனர். படம்: ஏஎஃப்பி