மடகாஸ்கார் விளையாட்டரங்கில் வெடிகுண்டு தாக்குதல்

மடகாஸ்கார் விளையாட்டரங்கில் வெடிகுண்டு தாக்குதல்

1 mins read

அந்தனராரிவோ: மடகாஸ்காரின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது கையெறி குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது இருவர் மாண்டதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விளையாட்டரங்கத்தில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலின் காரணமாக ஏறத்தாழ 80 பேர் காயமுற்றனர். இதை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று மடகாஸ்கார் அதிபர் திரு ஹெரி ராஜாவ் னாரிமாம்பியானினா அறிவித் துள்ளார். இத்தாக்குதலுக்கு அரசியலில் நிலவி வரும் கருத்து வேறுபாடு தான் காரணம் என்று அவர் குறைகூறினார். "அரசியலில் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் தலைவரைப் பிடிக்காவிட்டால் பொதுமக்களைக் கொலை செய் வது சரியல்ல. நாட்டின் அமைதி யை சீர்குலைக்கும் இத்தகைய செயல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம்.

"இந்தச் செயல் நாட்டின் அமைதியை சீர்குலைப்பது மட்டுமல்ல, இது ஒரு பயங்கர வாதத் தாக்குதல்," என்று அவர் தெரிவித்தார். மடகாஸ்கார் அதிபரின் ஆதர வாளர்களுக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்வதால் அங்கு பதற்றநிலை நிலவி வருகிறது. தேசிய தினக் கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக விளையாட் டரங்கத்தில் இலவச கலைநிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டது. தாக்குதலுக்கு யார் காரணம் என்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப் படுகிறது.