இஸ்தான்புல் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள்

இஸ்தான்புல் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள்

1 mins read
67db21c6-0d30-4747-9cf1-ec2c612e7852
-

இஸ்தான்புல்: இஸ்தான்புல் விமான நிலையத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் துருக்கிய அதிகாரி களுக்கு கிடைத்திருப்பதாக அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இஸ்தான்புல் தாக்குதலில் ஈடுபட்ட மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த மூவர் ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று நம்பப்படும் அந்த மூன்று பேரும் இஸ்தான்புல் விமான நிலைய பயணிகள் கட்டடத்திற் குள் நுழைவது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மூவர், சிரியாவில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள ஒரு நகரிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு துருக்கிக்குள் நுழைந்ததாகவும் அங்கிருந்து வரும்போது அவர்கள் வெடிகுண்டு நிரம்பிய இடைவார்கள் மற்றும் தாக்கு தலுக்கு பயன்படுத்துவதற்கான வெடி குண்டுகளையும் கொண்டு வந்ததாகவும் அரசாங்கத் தகவல் கூறியது. அந்த மூவரும் இஸ்தான்புல் நகரில் ஒரு வட்டாரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந் ததாகவும் அந்த வீட்டில்தான் ஒருவன் அவனது பாஸ்போர்ட்டை விட்டுச் சென்றதாகவும் துருக்கிய அரசாங்கம் தெரிவித்தது. அத்தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தலைமைத்துவ ஈடுபாட்டுடன் நன்கு திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டதாக அரசாங்கத் தகவல் கூறியது.

கனமான சட்டைகளை அணிந்திருந்த மூன்று பேர் பைகளுடன் விமான நிலையத்திற்குள் நுழைவது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்