கோலாலம்பூர்: மலேசியாவில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ள பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு ஜனநாயக செயல் கட்சி ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளது. லிம் குவான் எங்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் இதனால் அவர் பதவி துறக்க வேண்டியதில்லை என்றும் அக் கட்சியின் தேசியத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். கோலாலம்பூரில் நேற்று நடந்த அக்கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. திரு லிம் குவான் எங் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில் எதிர்க்கட்சியை இன்னும் ஒன்றுபடச் செய்திருக் கிறது என்றும் அக்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
லிம் குவான் எங்கிற்கு ஜனநாயக செயல் கட்சி ஒருமித்த ஆதரவு
1 mins read
-

