பங்ளாதேஷ் உணவகத்தில் 20 வெளிநாட்டினர் கொலை

பங்ளாதேஷ் உணவகத்தில் 20 வெளிநாட்டினர் கொலை

2 mins read
0440673f-ada9-471a-a40e-e9af9cff834d
-

பங்ளாதேஷ் தலைநகர் டாக்கா வில் துப்பாக்கிக்காரர்களால் பிணைபிடிக்கப்பட்ட 20 வெளி நாட்டினர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு ஹோலே ஆர்டிசன் பேக்கரி எனப் படும் ஸ்பானிய உணவகத்திற் குள் துப்பாக்கிகளுடனும் வெடி பொருட்களுடனும் நுழைந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் அங்கிருந்தவர்களை பிணை பிடித்தனர்.

பங்ளாதேஷ் நேரப்படி இரவு 9.20 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஊடகங்கள் குறிப் பிட்டன. சிறிது நேரத்தில் உண வகத்தின் உள்ளிருந்து இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சிலர் தெரிவித்தனர். தகவலறிந்த தும் உணவகத்தை ராணுவம் சுற்றிவளைத்தது. இருப்பினும், கிட்டத்தட்ட பத்து மணி நேரத் திற்குப் பின்னரே பயங்கரவாதி களை கூட்டுப்படை தாக்கத் தொடங்கியது.

ஆனால், உணவகத்திற்குள் ராணுவம் தலைமையிலான கூட்டுப்படை நுழைந்தபோது பிணைபிடிக்கப்பட்டு இருந் தோரில் 20 பேர் சடலங்களாகக் காணப்பட்டனர். உணவகத்தின் உள்ளே நேற்றுக் காலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அதிரடித் தாக்குதல் நீடித்தது. அதன் முடிவில் தாக்கு தல்காரர்களில் அறுவரைச் சுட்டு வீழ்த்திய படையினர், உணவ கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஒருவன் உயிரோடு பிடிபட்டுள் ளான். சம்பவ இடத்திலிருந்து கூர்மையான ஆயுதங்கள், வெடிக் காத வெடிமருந்துக் கருவி, வாக்கி டாக்கி சாதனம் ஆகிய வற்றை படையினர் கைப்பற்றி னர்.

கிட்டத்தட்ட நூறு அதிரடிப் படையினர் உணவகத்தினுள் நுழைந்த பின் கடுமையான துப் பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்ட தாக வெளியே இருந்த பார்வை யாளர்கள் சிலர் தெரிவித்தனர். கொல்லப்பட்டோரில் பெரும்பா லானோர் ஜப்பானியர்கள் அல் லது இத்தாலியர்கள் என்று லெப்டினெண்ட் ஷஹாப் உதின் என்னும் ராணுவ அதிகாரி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ராணுவ மருத்துவமனையில் இருபது சடலங்களிலும் மரபணுச் சோதனை நடத்தப்பட்டு வருவ தால் மாண்டோரின் தெளிவான விவரத்தை அவர் வெளியிட வில்லை. இருப்பினும் அந்த 20 பேரும் வெளிநாட்டினர் என்பதை நேற்று பிற்பகலில் செய்தியாளர்களிடம் பிரிகேடியர் ஜெனரல் நயீம் அஷ்ஃ பாக் சவுத்ரி உறுதிப்படுத்தினார்.

தாக்கப்பட்டு படுகாயமடைந்த போலிஸ்காரர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்