தாக்குதலில் ஐஎஸ்ஸுக்குத் தொடர்பு மலேசியாவின் பூச்சோங்கில் உள்ள மொவிடா இரவு நேர கேளிக்கை விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கை யெறிகுண்டுத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பிற்குத் தொடர்பு இருப்பதை மலேசிய போலிஸ் உறுதி செய்துள்ளது. ஐஎஸ் அமைப்பால் மலேசியா வில் நடத்தப்பட்ட முதல் தாக் குதல் இதுதான் என்றும் தெரி விக்கப்பட்டது. கையெறிகுண்டுகளை வீசிய தாக இம்மாதம் முதல் தேதி போர்ட் கிள்ளானில் 19 வயது இளையர் ஒருவரும் 52 வயது ஆடவர் ஒருவரும் கைது செய் யப்பட்டதாக போலிஸ் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார்.
சிரியாவிலிருந்தபடி செயல் படும் 'ஐஎஸ் மலேசியா' பயங்கர வாதக் குழுவைச் சேர்ந்த முகம்மது வாண்டி முகம்மது ஜேடி என்பவன் அவர்கள் இருவரை வழிநடத்தியதாகவும் திரு காலிட் குறிப்பிட்டார்.

