நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய ஜூனே விண்கலம் வெற்றிகரமாக வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. வியாழன் கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் 1.1 மில்லியன் செலவு செய்து ஜூனே விண்கலத்தைத் தயாரித்தனர். இந்த விண்கலம் புளேரிடா மாநிலத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து 2011 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தெடர்ந்து 5 ஆண்டுகளாகப் பயணித்து பல கிலோ மீட்டர் தொலைவைக் கடந்த இந்த விண்கலம் வெற்றிகரமாக வியாழன் கிரகத்தின் சுற்றுப் வட்டப் பகுதியில் நுழைந்ததாக நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்
ஜூனோ விண்கலம்; வெற்றிப் பயணம்
1 mins read

