கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் நீந்தி வந்த பங்ளாதேஷ் ஆடவர் கைது

1 mins read

மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு­வில் இருந்து சிங்கப்­பூ­ருக்­குள் கள்­ளத்­த­ன­மாக நீந்தி வந்த­தாக பங்­ளா­தேஷ் ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு 3.00 மணிக்கு சிங்கப்­பூர் கட­லோ­ரக் காவல்­துறை­யி­னர் உட்­லண்ட்ஸ் குடி­யு­ரிமை, சோதனைச் சாவடி ஆணை­யத்­தி­டம் கரை­யோ­ர­மாக ஒரு­வர் சிங்கப்­பூர் நோக்கி நடந்து வரு­வ­தாக அறி­வித்­ததை­ய­டுத்து அந்த ஆட­வர் அடுத்த அரை மணி நேரத்­தில் கைது செய்­யப்­பட்­டார். முதற்கட்ட விசா­ரணை­யில் அவர் சிங்கப்­பூ­ருக்­குள் கள்­ளத் ­த­ன­மாக நீந்தி வர இருந்தது தெரிய வந்தது.

அவ­ரி­டம் மேலும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக குடி­யு­ரிமை, சோதனைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­தது. கள்­ளத்­த­ன­மாக சிங்கப்­பூ­ருக்­குள் நுழைய முயல்­ப­வ­ருக்­கும் சிங்கப்­பூ­ரில் அனு­ம­தி­யின்றி தங்­கி­யி­ருப்­ப­வ­ருக்­கும் குறைந்தது ஆறு மாதச் சிறைத்­தண்டனை­யும் 3 பிரம்ப­டித் தண்டனை­யும் கிடைக்­ கலாம். சட்ட விரோதக் குடிநுழைவுக்கு 6 மாதச் °சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்படலாம்.