பங்ளாதே‌ஷிற்கு ஐஎஸ் மிரட்டல்

பங்ளாதே‌ஷிற்கு ஐஎஸ் மிரட்டல்

2 mins read

டாக்கா: பங்ளாதே‌ஷில் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்போவதாக ஐஎஸ் பயங்கரவாதக் குழு மிரட்டல் விடுத்துள்ளது. அங்கு ஷரியா சட்டம் நடப்புக்கு வரும் வரை மேலும் தாக்குதல்கள் நடத்தப்போவதாக அக்குழு எச்சரித்துள்ளது. சென்ற வாரம் டாக்கா உணவகத்தில் உள்ளூர் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த வர்கள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் 18 பேர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். அந்த துயரச் சம்பவத் திலிருந்து மக்கள் மீளாத நிலையில் மீண்டும் அங்கு தாக்குதல்கள் நடத்தப்போவதாக ஐஎஸ் குழு மிரட்டல் விடுத் திருப்பது அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

டாக்கா உணவகத்தில் நடந்த தாக்குதல் சிறிய தாக்குதல் என்றும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஐஎஸ் அதன் வீடியோ செய்தியில் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த வீடியோவில் தோன்றிய ஒருவன், தாங்கள் வெற்றி பெறும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாகவும் இறுதியில் உலகம் முழுவதும் ஷரியா சட்டம் நடப்புக்கு வரும் என்றும் கூறினான். அவன் பங்ளாதேஷைச் சேர்ந்த போராளி அபு இசா அல்-=பெங்காளி என்று அடையாளம் கா-ணப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை டாக்கா உணவகத்தினுள் நுழைந்து 20 பேரை சுட்டுக் கொன்றவர்கள் உள்நாட்டு தீவிரவாதக் குழு வினர் என்று பங்ளாதேஷ் அதிகாரிகள் கூறியுள்ளனர். தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த பிணையாளிகளை மீட்க போலிஸ் மின்னல் படை வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தியபோது உணவக ஊழியர் ஒருவர் தவறுதலாக சுட்டுக் கொல்லப் பட்டதை போலிசார் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரில் 6 பேரை போலிசார் சுட்டுக்கொன்றனர். ஒருவன் உயிருடன் பிடிபட்டான்.