ஈராக்கில் சென்ற வார இறுதியில் கார் குண்டு வெடித்த பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். தலைநகர் பாக்தாத்திலுள்ள கராடா பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பல கடைகள் உள்ள அப்பகுதியில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் திரண்டிருந்தபோது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 245 பேர் உயிரிழந்தனர்; சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். வழக்கமாக பரபரப்பாகக் காணப்படும் அந்த கடைத்தொகுதி சில நாட்களாக வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில் நோன்புப் பெருநாளான நேற்று அப்பகுதியில் மக்கள் ஒன்றுகூடினர். படம்: ராய்ட்டர்ஸ்
ஈராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் ஒன்றுகூடிய மக்கள்
1 mins read
-

