மலேசியாவில் ஒரு மாது சுட்டுக் கொலை; சிறுமி காயம்

மலேசியாவில் ஒரு மாது சுட்டுக் கொலை; சிறுமி காயம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் தாமான் புறநகர் பகுதியில் ஒரு மாது காரில் சென்று கொண் டிருந்தபோது அடை யாளம் தெரியாத சிலர் அவரை சுட்டுக் கொன்றதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அந்த மாதின் 8 வயதுச் சிறுமி படுகாயம் அடைந்தாகவும் அச்சிறுமி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலிஸ் அதிகாரி கூறினார். அந்த மாது அருகில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடச் சென்றபோது அவரை சிலர் சுட்டுக் கொன்றதாக அவர் சொன்னார். போலிசார் புலன் விசாரணை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.