ஈராக்கில் ஐஎஸ் தாக்குதல்: பலர் பலி

ஈராக்கில் ஐஎஸ் தாக்குதல்: பலர் பலி

1 mins read
c4a4b6f0-3f45-4fe8-9f59-85361f9568b4
-

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே குண்டு வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 60 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பாக்தாத் நகரில் இருந்து வடக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் பலாட் என்ற இடத்தில் ‌ஷியா பிரிவினரின் வழிபாட்டுத்தலமும் அதற்கு அருகில் ஒரு பள்ளிவாசலும் உள்ளன. வியாழக்கிழமை இரவு அந்த பள்ளிவாசல் மீது போராளிகள் 'மோர்ட்டார்' ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் அங்கிருந்தவர்கள் பீதியடைந்து சந்தைப் பகுதி வழியாக ஓடியபோது அந்த கூட்டத்துக்குள் புகுந்த இரு தற்கொலைப்படையினர் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

பாக்தாத்தில் குண்டு வெடித்த இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்