இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடை யிலான இறுதிக்கட்ட போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்க முடியாது என்ற இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகக் கூறியுள்ளார். "போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்து எங்கு வேண்டுமானாலும் விவா தம் நடத்தப்படலாம்.
ஆனால், நான் அதிபராக இருக்கும் வரை அவை தொடர்பான விசா ரணையில் வெளிநாட்டு நீதிபதி களை அனுமதிக்க முடியாது.
இலங்கையின் சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் எதிரான எந்த ஒரு செயலையும் நான் அனுமதிக்கமாட்டேன்," என்று நேற்று முன்தினம் புத்த பிக்கு கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில் சிறிசேன தெரிவித்தார். போர்க்குற்றம் குறித்து விசாரிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் புலனாய் வாளர்களும் இடம்பெறும் அனைத்துலக விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றம் வலியுறுத்தி வருகிறது.

