'ஈராக் போர் சட்ட விரோதமானது'

'ஈராக் போர் சட்ட விரோதமானது'

1 mins read

லண்டன்: ஈராக் மீது தொடுக்கப்பட்ட போரில் சேர்ந்துகொள்ள பிரிட்டன் எடுத்த முடிவு சட்ட விரோதமானது என்று முன்னாள் பிரிட்டிஷ் துணைப் பிரதமர் ஜான் பிரஸ்காட் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையில் 2003-ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது போர் தொடுக்க உடன்பட்ட அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரின் முடிவு சட்டவிரோதமானது என்று ஜான் பிரெஸ்காட் தெரிவித்துள்ளார். ஈராக் போர் சட்ட விரோதமானது என்று முன்னாள் ஐநா தலைமைச் செயலாளர் கோஃபி அன்னான் கூறியது சரியே என்று தான் இப்போது நம்புவதாகவும் பிரஸ்காட் கூறினார். ஈராக் போரில் பிரிட்டன் ஈடுபட்டது குறித்து ஆராய அமைக்கப்பட்ட விசாரணைக் குழு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கை, ஈராக்கிய அதிபர் சதாம் ஹூசேனால் அப்போது ஆபத்து இல்லை என்று தெரிந்திருந்தும் அமைதி வழிகள் பல இருந்தும் அமெரிக்காவுக்கு துணை யாக பிரிட்டன் ஈராக் போரில் சேர்ந்தது தவறான முடிவு என்று கூறியது.