பள்ளியில் நீதி கற்பிக்கப்பட வேண்டும்: வைரமுத்து

பள்ளியில் நீதி கற்பிக்கப்பட வேண்டும்: வைரமுத்து

1 mins read

சென்னை: மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அவசியம் என கவிஞர் வைரமுத்து கூறினார். மதுரையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், முன்பெல்லாம் கல்வி கற்காத போதும் சமூகம் ஒழுக்கமாக இருந்தது என்றும் கல்வி கற்ற இன்றைய சமூகம் ஒழுக்கமாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் நிலையில் உள் ளது என்றும் கவலை தெரிவித்தார்.

"மொழி, கவிதைகளை நேசிப் பவர்கள் அற வழியில் நடப்பார் கள். பெண்களை சக உயிராக நினைக்கும்போது தான் வக்கிரம் குறையும். சமூகத்தில் நல்ல மாற் றங்கள் ஏற்பட, பள்ளி மாணவர் களுக்கு நீதி போதனை வகுப்பு அவசியம்," என்றார் வைரமுத்து.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாளை மதுரையில் 'கவிஞர்கள் திருநாள்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவில் இலங்கை யாழ்ப்பாண பல்கலை தமிழ்த்துறை மற்றும் எழுகலை இலக்கியப் பேரவையால் தேர்வு செய்யப்பட்ட ஈழத்து கவிஞர்கள் ஜமீல், நவுபல் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் களுக்கான விருது வழங்கப்படு வதாகவும் வைரமுத்து கூறினார்.