தீர்ப்பை மதித்து நடக்க ஜப்பான், வியட்னாம் இணக்கம்

தீர்ப்பை மதித்து நடக்க ஜப்பான், வியட்னாம் இணக்கம்

1 mins read

தோக்கியோ: தென்சீனக் கடல் பகுதி தொடர்பாக அனைத்துலக நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பை மதித்து நடக்க ஜப்பானும் வியட்னாமும் இணக்கம் கண்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஜப்பான் தலையிடக்கூடாது என்று சீனா எச்சரித்திருந்தும் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே, மங்கோலியா வருகையின்போது வியட்னாம் பிரதமர் இங்யென் சுவானுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளார். சீனப் பிரதமர் லி கியாங்கையும் திரு அபே சந்தித்துப் பேசியுள்ளார். மங்கோலியாவில் நடக்கும் மாநாட்டின்போது தென்சீனக் கடல் பகுதி தொடர்பில் பேச்சு நடத்தக்கூடாது என்று சீனா ஏற்கெனவே கூறியிருந்தது.

இருப்பினும் அந்த விவகாரம் குறித்து இந்த மாநாட்டில் பிலிப்பீன்ஸ் எழுப்பியிருப்பதற்கு சீனா கண்டனம் தெரி வித்துள்ளது. நடுவர்மன்றத் தீர்ப்பு குறித்து சீனாவுடன் பேச்சு நடத்த பிலிப்பீன்ஸ் விரும்புவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித் துள்ளார். அதுகுறித்து பேசுவதற்கு ஒரு தூதரை அங்கு அனுப்ப இருப்பதாக பிலிப்பீன்ஸ் தெரிவித்துள்ளது.