தென்சீனக் கடலில் சீனா அணு உலைகளை கட்டக்கூடும்

தென்சீனக் கடலில் சீனா அணு உலைகளை கட்டக்கூடும்

1 mins read

பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனா அணு உலைகளைக் கட்டக்கூடும் என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அந்தக் கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடுவதற்கு சட்டபூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று தி ஹேக் நடுவர்மன்றம் தீர்ப்பு வழங்கிய ஒரு சில நாட்களில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் சீனா அண்மைய மாதங்களில் செயற்கைத் தீவுகளை உருவாக்கியுள்ளது. அனைத்துலக நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும் அத்தீர்ப்பு சீனாவை கட்டுப்படுத்தாது என்றும் சீனா கூறியுள்ளது.