போதைப்பொருள் விசாரணை தொடர்பில் பீட்டர் லிம்மைச் சந்தித்த அதிபர்

போதைப்பொருள் விசாரணை தொடர்பில் பீட்டர் லிம்மைச் சந்தித்த அதிபர்

1 mins read
d808500b-9fb7-4b8b-8b0f-7645026f8864
-

மணிலா: செபுவைச் சேர்ந்த வர்த்­த­கர் பீட்டர் லிம்மை போலிஸ் விசா­ரணைக்கு உட்­பட்டு தாம் 'மாபெரும் போதைப்­பொ­ருள் கடத்­தல்காரனான பீட்டர் லிம் இல்லை' என்று நிரூ­பிக்­கு­மாறு பிலிப்­பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் கூறி­யுள்­ளார். சென்ற வெள்­ளிக்­கிழமை டாவோ நகரில் அதிபர் டுடெர்ட், லிம்மைச் சந்­தித்­த­போது தாம் சட்­ட­வி­ரோத போதைப்­பொ­ருள் கடத்­தி­லில் ஈடு­ப­ட­வில்லை என்றும் நாட்டில் போதைப்­பொ­ரு­ளுக்கு எதிராக நடத்­தப்­படும் நட­வ­டிக்கை­களில் தாம் உத­வப்­போ­வ­தா­க­வும் லிம் கூறினார். அதற்கு அதிபர் டூட்ரெட், "மன்னிக்கவும். என்னால் உங்களைக் காப்­பாற்ற இயலாது," என்று கூறினார்.

சீன நாட்­ட­வ­ரான வு டுவான் என்றழைக்கப்படும் பீட்டர் கோ, ஜாகுவார் என அழைக்­கப்­படும் பீட்டர் லிம், லுஸே„ன் ஆகிய மூவரும் பிலிப்­பீன்­சில் சட்­ட ­வி­ரோ­த­மாக போதைப்­பொ­ரு ளைக் கையா­ளு­வ­தாக அதிபர் முன்பு குறிப்­பிட்­டி­ருந்தார். அவர்­களில் கோ தற்போது முடின்­லுபா நகரில் உள்ள சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளான். ஜாகு­வா­ரின் அடை­ யா­ளம் இன்னும் உறு­திப்­படுத்­தப் ­ப­ட­வில்லை.

பீட்டர் லிம்முடன் உரையாடும் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் (வலது). படம்: ஏஎஃப்பி