இஸ்தான்புல்: துருக்கியில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியை அந்நாட்டு அதிபர் இரும்புக்கரம் கொண்டு வெற்றிகரமாக முறியடித் ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நாடெங்கிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்திற்கு ஆதரவாக வும் அரசாங்கத்திற்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவும் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்தான்புல், அங்காரா உள்பட பல நகரங்களில் உள்ள தெருக் களில் ஒன்றுதிரண்டனர். முன்ன தாக துருக்கிய அரசாங்கம், சனிக்கிழமை இரவு முழுவதும் முக்கிய சதுக்கங்களில் ஒன்றுகூடி அரசாங்கத்திற்கான ஆதரவை வெளிப்படுத்துமாறு மக்களை கேட்டுக்கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தெருக்களில் ஒன்றுகூடிய மக்கள் தேசியக் கொடியை அசைத்தும் பாடல்களைப் பாடியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
ஜனநாயகத்தை ராணுவத் தினர் சீர்குலைக்க முடியாது என்றும் அவர்கள் குரல் எழுப் பினர். துருக்கியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட ராணுவப் புரட்சியை முற்றிலுமாக முறியடித்து விட்ட தாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்தினர் கைப்பற்றிய பகுதிகள் எல்லாம் தற்போது அரசாங்கப் படையினரின் கட்டுப் பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
அதிபருக்கு ஆதரவாக இஸ்தான்புல் நகரில் ஒன்றுகூடிய மக்கள். படம்: ஏஎஃப்பி

