இஸ்தான்புல்: துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு துடைத்தொழிக்கும் நட வடிக்கையில் அந்நாட்டு அதிபர் எர்டோகன் ஈடுபட்டுள்ளார். ஆட்சியைக் கவிழ்க்க அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியவர்களை 'கிருமிகள்' என்று அவர் குறிப் பிட்டுள்ளார். இந்த சதித் திட்டத்தை தீட்டியவர்கள் இனி எங்கும் ஓடி ஒளிய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். துருக்கியில் ராணுவத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 6,000 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலை யில் இன்னும் பலரை அடையாளம் காண போலிசார் தீவிர சோதனை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின் றனர்.
துருக்கியில் வெள்ளிக் கிழமை ஏற்பட்ட ராணுவப் புரட்சியின்போது ஏற்பட்ட மோதல்களில் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரி வித்தது. இறந்தவர்களில் நூற்றுக்கும் அதிகமானோர் புரட்சியில் ஈடுபட்டவர்கள் என்று அமைச்சு குறிப்பிட்டது. ராணுவப் புரட்சியை அதிபர் எர்டோகன் வெற்றிகரமாக முறி யடித்ததைத் தொடர்ந்து சதித் திட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை போலிசார் கைது செய்து வருகின்றனர்.

