அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 போலிசார் பலி

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 போலிசார் பலி

1 mins read
c7d5f0cf-7d65-4d41-ab61-f5ea7bb9ea28
-

பேட்டன் ரூஜ்: அமெரிக்காவில் மீண்டும் போலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்துள்ள லுயிசியானா மாநிலத்தின் பேட்டன் ரூஜ் பகுதியில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒருவன், மறைந்திருந்து போலிசாரை நோக்கிச் சுட்டதில் மூன்று போலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயம் அடைந்தனர். அந்தத் துப்பாக்கிக்காரனை போலிசார் அதே இடத்தில் சுட்டுக் கொன்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேட்டன் ரூஜ் பகுதியில் போலிஸ் அதிகாரிகள் மூவரை சுட்டுக் கொன்றவன் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் என்றும் அவன் ஈராக்கில் ஐந்து ஆண்டுகள் சேவையாற்றிய அமெரிக்க கடற்படை வீரரான 29 வயது கெவின் லாங் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறின. அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முன்னதாக அவன் இணையப்பக்க வீடியோவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை போலிசார் நடத்தும் விதத்தைக் குறை கூறியிருந்ததாகக் கூறப் பட்டது. தான் எந்த ஒரு குழுவையும் சேர்ந்தவன் அல்ல என்றும் தனக்கு எந்த நேரத் திலும் எதுவும் நடந்தாலும் நடக் கலாம் என்றும் அவன் யூடியூப்பில் தெரிவித்திருந்ததாகவும் தகவல் கள் கூறுகின்றன.

பேட்டன் ரூஜ் நகரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் போலிஸ் அதிகாரிகள் கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி