இஸ்தான்புல்: அண்மையில் துருக்கியில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அதற்குக் காரணமாக இருந்ததாக சந்தேகிக் கப்படும் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களில் துருக்கி ராணு வத்தின் மூத்த ஜெனரல்கள் 26 பேர் அடங்குவர். இந்த 26 பேரையும் தடுப்புக் காவலில் வைக்குமாறு துருக்கிய நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களில் துருக்கி யின் முன்னாள் ஆகாயப் படைத் தலைவர் ஜெனரல் அகின் ஓஸ்டர்க்கும் ஒருவர். இவர்தான் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் சூத்திரதாரி என்று துருக்கிய ஊடகங்கள் கூறி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டை ஓஸ்டர்க் மறுத்துள்ளார். துருக்கி அதிபர் எர்டோகனின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி செய்தவர்களைத் தேடும் பணி முடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 7,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 9,000 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தவர்களைத் துரோகிகள் என்றும் நாட்டிற்கு எதிராகச் செயல்படும் கிருமிகள் என்றும் சாடிய அதிபர் எர்டோகன், அவர்களை ஒழிக்க சூளுரைத் துள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கிய போதகரான ஃபெத்துல்லா குலேன்தான் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு வித்திட்டார் என்று திரு எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். அவரைத் துருக்கிக்கு அனுப்பி வைக்குமாறு திரு எர்டோகன் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் குற்றச் சாட்டை திரு குலேன் மறுத் துள்ளார். இதற்கிடையே, இஸ் தான்புலில் ராணுவக் குடியிருப்பை அமைக்க திரு எர்டோகன் சூளுரைத்துள்ளார். திரு எர்டோ கனின் இந்தத் திட்டத்துக்கு 2013ஆம் ஆண்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இஸ்தான்புலில் ராணுவக் குடியிருப்பை அமைக்க இம்முறை எதிர்ப்பு கிளம்பினாலும் அதற்கான பணிகள் தொடரும் என்றார் திரு எர்டோகன்.

