சாபா கடல் பகுதியில் மலேசிய படகு சிப்பந்திகள் ஐவர் கடத்தல்

சாபா கடல் பகுதியில் மலேசிய படகு சிப்பந்திகள் ஐவர் கடத்தல்

1 mins read

மணிலா: சாபா கடல் பகுதியில் மலேசிய படகு ஒன்றின் ஐந்து சிப்பந்திகளை அபு சாயஃப் போராளிகள் கடத்திச் சென்றதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லஹாட் டட்டு அருகே கடல் பகுதியில் இழுவைப் படகு ஒன்று மட்டும் காணப்பட்டதாகவும் சிப்பந்திகள் யாரும் அதில் இல்லை என்றும் மலேசிய அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் அந்த சிப்பந்திகள் கடத்தப்பட்டதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஐந்து சிப்பந்திகளும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று சாபா போலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பிணைப்பணம் கேட்டு கடத்தல்காரர்களிமிருந்து தொலைபேசி அழைப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று அந்த சிப்பந்திகளின் குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.