சீனாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு; மக்கள் தவிப்பு

சீனாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு; மக்கள் தவிப்பு

1 mins read
ce3dfe26-f31a-4428-931e-4c2622f803a7
-

சீனாவில் பெய்ஜிங் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளிலும் தெருக்களிலும் தேங்கியுள்ள வெள்ளநீரைக் கடக்க அவர் சிரமப்படுகின்றனர். வெள்ளநீர் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுநர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, புயல் காற்று இவற்றால் மக்கள் ஆண்டுதோறும் அவதிப்பட நேர்ந்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சீன அதிபர் சி ஜின்பிங், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வெள்ளப்பெருக்கில் வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்