நியூடெல்லி: பங்ளாதேஷில் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவரின் மகனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முன்னைய பிரதமர் கலிதா ஜியாவின் மகனான டாரிக் ரஹ்மானுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அவரை விடுவித்த கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை நேற்று உயர் நீதிமன்றத்தின் இருவர் அடங்கிய அமர்வு ரத்து செய்தது.
பிரதமர் ஷேக் ஹசினாவுக்கும் முக்கிய எதிர்க்கட்சியின் தலை வியான கலிதா ஜியாவுக்கும் இடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கலிதா ஜியா வின் மகன் சிறையில் அடைக்கப் பட்டார். திரு டாரிக் ரஹ்மானுக்கு 200 மில்லியன் டாக்கா (2.54 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே தீர்ப்புக்கு எதிராக டாரிக் ரஹ்மான் மேல் முறையீடு செய்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 2003க்கும் 2007க்கும் இடையே இவரும் இவரது வர்த்தக நண்பரும் சிங்கப்பூருக்கு 204.1 மில்லியன் டாக்காவை அனுப்பிய வழக்கில் இருவரையும் கீழ் நீதி மன்றம் விடுவித்தது.
கலிதா ஜியாவின் பங்ளாதேஷ் தேசிய கட்சியின் துணைத் தலை வருமான ரஹ்மான், கடந்த 2008ஆம் ஆண்டில் பிணையில் வெளியே வந்தார். அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக லண் டன் சென்ற அவர் இதுவரை நாடு திரும்பவில்லை. ஆனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரஹ்மானின் நண்பர் கியாசுடீன் அல் மாமுனுக்கு கீழ் நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்தது. இதனால் இவர் சிறைத் தண்டனையை அனுபவித்து வரு கிறார்.
பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் அவரது மகன் டாரிக் ரஹ்மானும். படம்: பங்ளாதேஷ் ஊடகம்

