நஜிப்பிற்கு நெருக்குதல்

நஜிப்பிற்கு நெருக்குதல்

1 mins read
3da03323-c2d3-4607-b04d-9b103e31104c
-

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பாக அமெரிக்க நீதித் துறை வழக்கு தொடுத் திருப்பதைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருப்பதாகவும் அவர் பதவி விலக மறுத்தால் தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் எதிர்க்கட்சியினரும் குடிமை சமூக குழுக்களும் அறிவித்துள்ளன.

தேர்தல் சீரமைப்புக்காகப் போராடி வரும் பெர்சே அமைப்பு, திரு நஜிப் பதவி விலகக் கோரி மீண்டும் பேரணி நடத்துவது குறித்து விவாதித்து வருவதாக அந்த அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறி னார். எந்தவொரு முடிவும் எடுக்கப் படுவதற்கு முன்பு அரசாங்கம் சாரா அமைப்புகளுடன் கலந்து பேச வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார். திரு நஜிப் பதவி விலகக் கோரி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெர்சே ஏற்பாடு செய்திருந்த பேரணியில் சுமார் 100,000 பேர் கலந்துகொண்டனர். இந்நிலையில் எதிர்க் கட்சியினரும் திரு நஜிப் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.