பெய்ஜிங்: வடகொரிய விமானத்தில் திடீரென்று தீ மூண்டதைத் தொடர்ந்து அந்த விமானம் சீனாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான விமானம் நேற்று காலை நூற்றுக்கும் அதிகமான பயணிகளுடன் பியோங்யாங் நகரில் இருந்து சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கை நோக்கி சென்றுகொண்டிருந்தது. சீனாவின் எல்லையில் பறந்தபோது அந்த விமானத்தில் தீப்பற்றியதால் ஷென்யாங் நகர விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.
வடகொரிய விமானத்தில் தீ; சீனாவில் அவசரமாக தரை இறங்கியது
1 mins read

