சீனாவில் கடந்த ஒருவாரமாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாநிலத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் சிக்கி குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் கூறின. பல பகுதிகளில் 18,000க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு கருதி இந்த மாநிலத்தில் 7.2 மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ஹுபெய் மாநிலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் 11 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். சீனாவின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இந்தப் பேரிடரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி
சீனாவில் கனமழை: பலர் பலி; ஏராளமானோர் வெளியேற்றம்
1 mins read
-

