கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ; நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ; நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

1 mins read
6154f586-e2ed-424e-bffc-b3e2afb47397
-

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலிஸ் மலைப்பகுதியில் காட்டுத் தீ வேகமாகப் பரவுவதால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அப்பகுதி முழுவதும் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள நீச்சல் குளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதிக வெப்பம் காரணமாகவும் பலத்த காற்று வீசுவதாலும் அப்பகுதியில் காட்டுத் தீ பரவுவதாக அதிகாரிகள் கூறினர். காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் உதவியுடன் சுமார் 900 தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.

கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. படம்: ஏஎஃப்பி