சூரிய சக்தி விமானத்தின் வெற்றிப் பயணம்

சூரிய சக்தி விமானத்தின் வெற்றிப் பயணம்

1 mins read
ad697e56-b1bf-4c6e-a242-7b8e9f64e895
-
Google News Preferred Icon

'சோலார் இம்பல்ஸ்2' என்றழைக்கப்படும் முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் விமானம் தனது உலகச் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து நேற்று தரையிறங்கியது. இதன் மூலம் உலகத்தைச் சுற்றிய முதல் சூரிய சக்தி விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது. 'சோலார் இம்பல்ஸ்2' விமானம் நேற்று சிங்கப்பூர் நேரப்படி காலை 8.05 மணிக்கு தலைநகர் அபுதாபியில் தரையிறங்கியது. நான்கு கண்டங்களையும் இரண்டு பெருங்கடல்களையும் மூன்று கடல்களையும் உள்ளடக்கி 42,000 கி.மீ பறந்த இந்த விமானம் 2015 மார்ச் 9ஆம் தேதி தன் பயணத்தைத் தொடங்கியது. ஓமானில் தொடங்கி இந்தியா, மியன்மார், சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா என்று தொடர்ந்து கடைசியாக அபுதாபியில் பத்திரமாகத் தரையிறங்கியது. படம்: ஈபிஏ