கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரம் தொடர்பில் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறிய மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர், விசாரணையை விரைவில் முடிக்குமாறு போலிசாரை நெருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். பலரின் வாக்குமூலங்களை போலிசார் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் விசாரணை முடிவுற சில காலம் பிடிக்கும் என்று திரு காலிட் கூறினார். சிலரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய இரு வாரங்கள்கூட ஆகிறது என்றும் அவர் கூறினார்.
'1எம்டிபி விசாரணை முடிவடைய சில காலம் பிடிக்கும்'
1 mins read

