சிரியாவில் குண்டு வெடிப்பு: 44 பேர் பலி

சிரியாவில் குண்டு வெடிப்பு: 44 பேர் பலி

1 mins read

டமாஸ்கஸ்: சிரியாவில் குர்திய இன மக்கள் அதிகமாக வசிக்கும் காமிஷ்லி நகரில் நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அந்தத் தாக்குதல் களுக்கு ஐஎஸ் பயங்கரவாதக் குழு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்விரு குண்டு வெடிப்புகளால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் நடந்து வருவ தாகவும் செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. ஐஎஸ் குழு கடந்த காலங்களிலும் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது.