வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் திருமதி ஹில்லரி கிளின்டனை வெற்றி பெறச் செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரி வித்துள்ளார். அமெரிக்க அதிபராக வருவதற்கு ஹில்லரி மிகவும் தகுதியானவர் என்றும் திரு ஒபாமா குறிப்பிட்டார். பிலடெல் பியாவில் நடந்த ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் உரையாற்றிய திரு ஒபாமா, ஹில்லரியை புகழ்ந்து பேசினார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹில்லரி தேர்ந் தெடுக்கப்படுவதை திரு ஒபாமா வலுவாக ஆதரித்துப் பேசினார். தடைகளைத் தகர்க்கும் திட்டங்களைப் பெற்றுள்ள ஒரு தலைவர் ஹில்லரி என்றும் திரு ஒபாமா கூறினார்.
வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு கண்ணாடிக் கூரையை அடித்து நொறுக்குவது போல தடைகளைத் தகர்த்து ஓவ்வொரு தனி அமெரிக்கரின் வாழ்க்கையிலும் வாய்ப்பு வட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளை ஆற்றும் திறமை யுள்ளவர் ஹில்லரி என்றும் ஒபாமா பாராட்டிப் பேசினார். பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் நான்கு நாள் மாநாட்டின் இறுதியில் உரையாற்றிய திரு ஒபாமா, தான் அதிபராக இருந்த 8 ஆண்டு களில் தமது வெற்றிகளைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினார். முன்னதாக அதே மாநாட்டில் பேசிய அமெரிக்கத் தலைமகள் மிஷெல் ஒபாமாவும் ஹில்லரி யைப் புகழ்ந்து பேசினார். அமெரிக்காவின் அடுத்த அதிபரா வதற்கு உண்மையிலேயே தகுதியானவர் ஹில்லரி என்று மிஷேல் ஒபாமா தெரிவித்தார்.

