கோலாலம்பூரில் வி.கந்தசாமி படுகொலை; சந்தேகப் பேர்வழிகளுக்கு வலைவீச்சு

கோலாலம்பூரில் வி.கந்தசாமி படுகொலை; சந்தேகப் பேர்வழிகளுக்கு வலைவீச்சு

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்திய ஆடவர் ஒருவர் புதன்கிழமையன்று பட்டப்பகலில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அக்கொலையைச் செய்தவர்களை போலிசார் தீவிர மாகத் தேடி வருகின்றனர். அக்கொலை தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகப் பேர்வழிகள் இன்னமும் மலேசி யாவுக்குள்தான் இருக்கின்றனர் என்று (தாங்கள் நம்புவதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். இந்தக் கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாவிட்டாலும் விரைவில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து விடுவோம். இந்தச் சந்தேகப் பேர்வழிகள் எங்கும் தப்பியோடிவிட முடியாது என்று அவர் சொன்னார்.

வட்டித்தொழில் செய்பவரான வி.கந்தசாமி (வயது 43) என்பவரை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் புதன்கிழமையன்று சுட்டுக் கொன்றனர். காருக்குள் இருந்த கந்தசாமி 16 முறை சுடப்பட்டதாக போலிஸ் வட்டாரங்கள் கூறு கின்றன. கோலாலம்பூரில் உள்ள ஒரு கடைத் தொகுதிக்கு அருகே சாலை சமிக்ஞை விளக்கு உள்ள இடத்தில் கந்தசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் கந்தசாமியை சுட்டுக் கொல்வதை வீடியோ படங்கள் காட்டியபோதிலும் அந்தக் கொலையாளிகள் யார் என்பது இன்னும் தெரியவில்லை. மோட்டார் சைக்கிள்களில் வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அண்மை யில் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய கொலைச் சம்பவங் களைத் தடுக்க போலிசார் சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கந்தசாமி 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கந்தசாமி அந்த புதிய காரை வாங்கியதாக அவரின் நண்பர் ஒருவர் கூறினார். சில நாட்களாக தன்னை சிலர் பின்தொடர்ந்து வருவதாக சந்தேகித்த அவர் தனது பழைய காருக்குப் பதிலாக புதிய காரை வாங்கியதாக அந்த நண்பர் கூறினார். கொலைக்கான காரண மும் கண்டறியப்படவில்லை என்று போலிசார் கூறினர்.