ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவின் மேடான் நகருக்கு அருகே உள்ள தஞ்சோங் பாலாயில் பெளத்த ஆலயங்கள் மீது தாக்கு தல் மேற்கொண்ட கும்பலைச் சேர்ந்த எழுவரை அந்நாட்டு அதி காரிகள் நேற்று கைது செய்தனர். அங்கு குறைந்தது மூன்று பௌத்த ஆலயங்களை இந்தக் கும்பல் தாக்கியதாக வட சுமத்ரா பகுதி போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறிளார். முஸ்லிம் சமய மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனீசியாவில் சீன வம் சாவளியினர் குறிப்பிடத்தக்க அள வில் உள்ளனர். இவர்களில் பலர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், அந்நாட்டில் சீனர்களுக்கு எதிராக அடிக்கடி வன்முறைச் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் கடைசியாக 1990களில் இந்தோனீசியாவில் அப்போதைய சர்வாதிகார அதிபர் ஜெனரல் சுகார்த்தோ தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது ஏற்பட்ட பொருளியல், அரசியல் நெருக் கடியில் சீன வம்சாவளியினர் தாக்கப்பட்டனர். எனினும், வெள்ளிக்கிழமை பௌத்த ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் சீன சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்படவில்லை என்று அந்நாட்டு போலிஸ் அதிகாரிகள் கூறினர். "இது சில தனிநபர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசல் சம் பந்தப்பட்டது," என்று விளக்கிய வட சுமத்ரா போலிஸ் பேச்சாளர் ரினா சாரி ஜின்டிங் தற்பொழுது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தார்.
மிதவாத இஸ்லாமிய சமய நெறிகளைப் பின்பற்றும் இந்தோனீசியாவில் அவ்வப்போது சமய சிறுபான்மையினருக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதுண்டு. எனினும், இதுபோன்ற வன் முறைச் சம்பவங்களை வளர விடாமல் அந்நாட்டு அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

