ஜோகூர் பாரு : மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கெம்பாஸ் பாரு என்ற இடத்தில் போக்குவரத்து நெரிசல் நேரத்தில் வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் சந்தேகப் பேர்வழிகளை போலிசார் விரட்டிச் சென்றனர். இதில் போலிஸ் வாகனம் ஒன்று உட்பட மொத்தம் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன (படத்தில்). மலேசியாவின் ஜோகூர் பாரு மாநிலத்தின் ஜாலான் கெம்பாஸ்=சீலோங் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6.10 மணிக்கு அன்றைய தினம் சில மணி நேரங்களுக்கு முன் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட புரோட்டோன் ஈஸ்வரா வாகனத்தை போலிசார் கண்டனர்.
வாகனத்தை நிறுத்தும்படி போலிசார் பிறப்பித்த ஆணையை ஏற்க மறுத்த சந்தேகப் பேர்வழிகள் வாகனத்தை நெரிசலான அந்த சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையே வேகமாக ஓட்டிச் சென்றனர். இதில் அந்த வாகனம் உட்பட ஆறு வாகனங்கள் சேதமடைந்தன. பின்னர், வாகனத்தை விட்டு ஓடிய திருட்டு சந்தேகப் பேர்வழிகள் இருவரை போலிசார் கைது செய்தனர்.

