கோலாலம்பூர்: மலேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமாய் மறைந்த MH370 விமானம்
வேண்டுமென்றே கடலுக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தாங்கள் நம்புவதாக புலன்விசாரணைக்
குழுவின் தலைவர் லாரி வேன்ஸ் தெரிவித்துள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட விமான விபத்துக் குறித்த
புலன்விசாரணைகளுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றவர். அண்மையில் மடகஸ்கார் கடலோரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகத்தை ஆராய்ந்ததில் இத்தகவல் புலப்படுவதாக அவர் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 239 பேருடன் புறப்பட்ட அந்த மலேசிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாய் மறைந்தது. அப்போது முதல் அந்த விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. அந்த விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் அந்த விமானம் இருந்திருக்க வேண்டும் என்று புலன்விசாரணைக் குழுவினர் நம்புகின்றனர்.