வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வரும் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின் டனை 'பிசாசு' என்று வர்-ணித் துள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் உரையாற்றிய டிரம்ப், வேட்பாளர் தேர்வில் ஹில்லரியை எதிர்த்துப் போட்டியிட்டு கடைசி நேரத்தில் விலகிய பெர்னி சாண்டர்சையும் சாடினார். ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட கட்சியின் நியமனத்தைப் பெறும் போட்டியில் ஹில்லரியிடம் அவர் பணிந்து விட்டதாக பெர்னி சாண்டர்ஸ் மீது டிரம்ப் குற்றம் சாட்டினார்.
"பெர்னி சாண்டர்ஸ் அந்தப் பிசாசிடம் ஓர் உடன்பாடு செய்துகொண்டு போட்டியி லிருந்து விலகிவிட்டார், " என்று கூறிய டிரம்ப் "ஹில்லரி ஒரு பிசாசு" என்று வர்ணித்தார். இதற்கிடையே டிரம்ப்பின் பேச்சு களுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஈராக்கில் 2004ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமியரான அமெரிக்க ராணுவ கேப்டன் ஹுமாயுன் கானின் பெற்றோரைப் பற்றி டிரம்ப் தெரிவித்த கருத்து களுக்கு ஜனநாயகக் கட்சி யினரும், குடியரசுக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குடியரசு கட்சியின் முன்னாள் வேட்பாளர் ஜான் மெக்கெயினும் டிரம்பின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல வர்த்த கரும் கோடீசுவரருமான டிரம்ப் மீது கடும் குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார்.

