அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் மேலும் 10 பேருக்கு ஸிக்கா கிருமி தொற்றியதையடுத்து அதிகாரிகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மியாமி நகரில் அக்கிருமி பலருக்குத் தொற்றியதை அடுத்து அங்குள்ள 2.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய பகுதிக்குச் செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். அந்நகரில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் ஸிக்கா கிருமி உள்ள கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. கொசுக்களை அழிக்க பல இடங்களில் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. படம்: ஏஎஃப்பி
ஃபுளோரிடாவில் பரவும் ஸிக்கா கிருமி
1 mins read
-

