ஹாங்காங், சீனாவில் சூறாவளி: மக்கள் பாதிப்பு

ஹாங்காங், சீனாவில் சூறாவளி: மக்கள் பாதிப்பு

1 mins read
3054f74f-e1f5-457c-9c5a-eb2fd349b9cc
-

பெய்ஜிங்: ஹாங்காங்கில் வீசிய பலத்த சூறாவளிக் காற்று தற்போது சீனாவின் குவாங்டோங் மாநிலத்தை தாக்கத் தொடங் கியுள்ளது. சக்திவாய்ந்த இந்த சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் சீனாவின் பல பகுதிகளில் விழிப்பு நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குவாங்சோ நகர மக்கள் முன்னெச்சரிக்கை பாது காப்பு நடவடிக்கையாக மூன்று நாட்களுக்குப் போதுமான உணவுப் பொருட்களையும் மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் தயாராக வைத்துள்ளனர்.

இங்குள்ள பணிமனைகளும் பள்ளிக்கூடங்களும் மூடப் ப டுள்ளன. மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க் வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 'நிடா' என்றழைக்கப்படும் இந்த சூறாவளி முன்னதாக ஹாங்காங்கில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. பலத்த காற்றுடன் கனமழையும் அங்கு பெய்தது. ஹாங்காங் விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் தவிக்க நேர்ந்தது.

சூறாவளிக் காற்று குவாங்சோங் நகரை நெருங்கிய வேளையில் ஏராளமான ஊழியர்கள் அந்நகரில் உள்ள ஒரு விளையாட்டரங்கத் திடலில் ஓய்வு எடுக்கின்றனர். சூறாவளியின் பாதிப்பிலிருந்து தப்ப பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர். நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குவாங்சோங் நகரில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவிக்க நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். படம்: ஏஎஃப்பி