பிரான்சில் சீன சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளை

பிரான்சில் சீன சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளை

1 mins read

பாரிஸ்: பிரான்சில் பாரிஸ் விமான நிலையத்திற்கு அருகே சீன சுற்றுலாப் பயணிகள் 27 பேரின் பொருட்களை கொள்ளைக் கும்பல் சூறையாடிச் சென்றதாக பிரெஞ்சு போலிசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது. சுற்றுலாப் பயணிகள் 27 பேர் ஒரு பேருந்தில் பாரிஸ் விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அந்தப் பேருந்தை வழிமறித்த கொள்ளையர்கள் சிலர் ஓட்டுநரையும் இரு பயணிகளையும் தாக்கிவிட்டு பயணப் பெட்டிகளுக்குள் இருந்த பணத்தையும் விலை உயர்ந்த மற்ற பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றதாக போலிசார் கூறினர். பாரிசில் சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளையர்கள் சூறையாடுவது அடிக்கடி நடந்து வருகிறது.