மரியா சின்: பெர்சே பேரணி நடப்பது உறுதி

மரியா சின்: பெர்சே பேரணி நடப்பது உறுதி

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் நஜிப்பிற்கு எதிராக பேரணி நடப்பது உறுதி என்று பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார். "மக்களிடையே 1எம்டிபி விவகாரம் பற்றிய முழுமையான விழிப்புணர்வு தேவை. மக்களிடம் இந்த விவகாரம் பற்றிய விழிப் புணர்வு குறைவாக உள்ளது. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்து வதை முக்கியமாகக் கருது கிறோம்" என மரியா, செய்தி யாளர்கள் கூட்டத்தில் தெரி வித்தார். பேரணிக்கான தேதியும் இடமும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

பேரணி மூலம் பல்வேறு தரப்புகளை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட மலேசியாவை உருவாக்க பெர்சே விரும்புகிறது என்றும் அவர் சொன்னார். அத் துடன் வரும் ஆகஸ்டு 27ம் தேதி நடக்கவிருக்கும் பேரணிக் கும் பெர்சே அதன் ஆதரவை வழங்கும். அரசாங்கம் சாரா சில அமைப்புகள் மற்றும் அக்கறை கொண்ட மக்களுடன் ஒன்று சேர்ந்து 1எம்டிபி ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதில் ஒன்றுதான் இந்தப் பேரணி என அவர் மேலும் கூறினார். இது பெர்சேயின் 5வது பேரணியாகும். இந்நிலையில் போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர், அமைதி ஒன்றுகூடல் சட்டத்தின் விதிமுறைகளை பெர்சே பின்பற்று மேயானால் பேரணி நடத்துவதற்கு போலிசார் அனுமதி வழங்குவர் என்று கூறியுள்ளார்.