லண்டன்: மத்திய லண்டனில் மனம்போன போக்கில் பலரைக் கத்தியால் குத்திய 19 வயது இளையரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயம் அடைந்தனர். "கத்தியால் தாக்கியவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக் கலாம் என்று நம்பப்படுகிறது. இருந்தாலும் இப்போது இது பற்றி ஒன்றும் கூற முடியாது என்று லண்டன் பெருநகர காவல் துறை உதவி ஆணையர் மார்க் ரோவ்லி கூறினார். லண்டன் ரசல் சதுக்கத்தில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணியளவில் கத்தி ஏந்திய ஒருவன் கண்மூடித்தனமாக பலரைத் தாக்குவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு விரைந்தனர். 2005ஆம் ஆண்டில் இதே இடத்துக்கு அருகில் உள்ள பூங்காவில்தான் தற்கொலைத் தாக்குதலும் நடைபெற்றது. சம்பவ இடத்தில் காவல்துறை யினர் மின் அதிர்ச்சி துப்பாக்கியைப் பயன்படுத்தி 19 வயது சோமாலியா வம்சாவளியைச் சேர்ந்த நார்வே நாட்டவரை கைது செய்தனர். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளைச் சலவை செய்து தாக்குதல்களை நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டமிடுவதாக முன்னதாக ரோவ்லி எச்சரித்திருந் தார். இந்த நிலையில் கத்திக் குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. காயமடைந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்குச் சம்பவ இடத் திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக் கப்பட்டது. காயம் அடைந்த இதர நால் வரில் ஒருவர் பெண். அனைவருக் கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அவர் களில் மூவர் வீடு திரும்பி விட்டனர் என்றும் காவல்துறை ஆணையர் குறிப்பிட்டார். காயம் அடைந்த நால்வர் ஸ்பெயின், இஸ்ரேல், ஆஸ்தி ரேலியா, பிரிட்டன் நாட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித் தனர். லண்டனில் பல்கலைக்கழகங் களின் வட்டாரமாகத் திகழும் ரசல் ஸ்கொயரை சுற்றி வளைத் துள்ள காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தடயவியல் முகாம் போடப்பட்டு ஆதாரங்களும் சேகரிக்கப்பட் டன. இதற்கிடையே லண்டன் மக் களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய லண்டன் மேயர் சாதிக் கான், மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று வலியுறுத் தினார்.
லண்டனில் கத்திக் குத்து; ஒருவர் பலி, ஐவர் காயம்
2 mins read
-

