வாஷிங்டன்: ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் வலுவிழந்து வந்த போதிலும் அது இன்னமும் தொடர்ந்து மிரட்டலாக விளங்கு வதாக அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்தார். ஐஎஸ் குழு பல இடங்களில் தோல்வி அடைந்த போதிலும் தற்போது வெளிநாடுகளில் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப் பதற்கான அறிகுறிகள் தெரி வதாகவும் திரு ஒபாமா கூறினார். ஐஎஸ் தாக்குதல் பற்றிக் கூறிய திரு ஒபாமா, அமெரிக்காவில் அக்குழு தூண்டிவிடப்படலாம் என்றும் சொன்னார்.
அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகளையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசிய பின்னர் திரு ஒபாமா செய்தியாளர்களிடம் ஐஎஸ் குழு பற்றி அறிவித்தார். ஐஎஸ் குழுவை தோல்வி அடையச் செய்ய முடியும் என்று கூறிய திரு ஒபாமா, அக்குழு நிச்சயம் ஒருநாள் தோற் கடிக்கப்படும் என்று சொன்னார். சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் இயக்கத்தினர் அவர்கள் வசம் இருந்த முக்கிய நகரங்களை இழப்பர் என்றும் ஒபாமா கூறினார். சிரியாவில் ரக்கா நகரமும் ஈராக்கில் மோசுல் நகரமும் இனி அவர்கள் கட்டுப்பாட்டில் இருக் காது என்றும் அவர் சொன்னார்.

