இத்தாலியில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கிய ஒரு சரக்கு விமானம் ஓடுபாதையைவிட்டு விலகிச் சென்றதைத் தொடர்ந்து அந்த விமானம் ஒரு நெடுஞ்சாலையில் வந்து நின்றதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். நல்லவேளையாக அந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த விமானத்தில் இருந்த விமானி உயிர் தப்பியதாகவும் அதிகாரிகள் கூறினர். அந்த விபத்தைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மோசமான பருவநிலை காரணமாக அந்த விமானம் ஓடுபாதையைவிட்டு விலகிச்சென்றதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
ஓடுபாதையிலிருந்து விலகி சாலைக்கு வந்த விமானம்
1 mins read
-

