'சீனாவின் நிலையை சிங்கப்பூர் மதிக்க வேண்டும்'

'சீனாவின் நிலையை சிங்கப்பூர் மதிக்க வேண்டும்'

1 mins read

பெய்ஜிங்: தென்சீனக் கடல் பகுதி விவகாரம் தொடர்பில் அண்மையில் ஹேக் நகரில் உள்ள நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்த சீனாவின் நிலையை சிங்கப்பூர் மதிக்க வேண்டும் என்று சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த விவகாரம் தொடர்பில் ஆசியான் நாடுகளுடன் சீனா உடன்பாடு கண்டுள்ள நிலையில் அந்த விவகாரம் குறித்து சீனா மிகத் தெளிவான நிலையை கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஹுவா சுங்யிங் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். தென் சீனக் கடல் விவகாரம் தொடர் பில் அனைத்துலக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது என்றும் அத்தீர்ப்பு செல்லுபடியாகாது என்றும் அப்பேச்சாளர் தெரி வித்துள்ளார். சீனா=ஆசியான் உறவுக்கான ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சிங்கப்பூர் அதன் நியாயமான நிலையை தொடர்ந்து கட்டிக்காக்கும் என்று சீனா நம்பிக்கை கொண் டுள்ளதாகவும் அவர் சொன்னார். இதன் மூலம் சிங்கப்பூர்=சீனா உறவும் சீனா- ஆசியான் உறவும் வலுவடையும் என்றும் அவர் கூறினார். அமெரிக்காவில் ஒரு விருந்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறிய கருத்து தொடர்பில் சீன ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு திருவாட்டி ஹுவா பதில் அளித்தார்.