முற்றுகையைத் தகர்த்த போராளிகள்; ஆரவாரத்தில் மக்கள்

முற்றுகையைத் தகர்த்த போராளிகள்; ஆரவாரத்தில் மக்கள்

1 mins read
09bcfaae-4932-4a12-b5bb-4bdbe3fb6ca6
-

டமாஸ்­கஸ்: அலெப்போ நகரைக் கைப்­பற்றி கடந்த ஒரு வாரமாக முற்­றுகை­யிட்­டி­ருந்த அர­சாங்கப் படை­களுக்கு எதி­ரா­கக் கடுமை­யா­கப் போரிட்டு வந்த சிரியப் போரா­ளி­கள் அந்த நக­ருக்­குள் நுழை­வதற்­கான வழியை ஏற்­படுத்தி இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ள­னர். அதன் எதிரொலியாக அங்கு வசிக்­கும் சிரிய மக்கள் மகிழ்ச்­சி­யு­டன் கொண்டா­டி­னர். ஆனால், சிரியப் போரா­ளிகளின் இந்த அறி­விப்­பில் உண்மை இல்லை எனவும் பீரங்­கித் தளத்­தின்­மீது தாக்­கு­தல் நடத்­திய அவர்­கள் மீது பலமான எதிர்த் தாக்­கு­தல் தொடுத்து அங்­கி­ருந்து விரட்­டி­ய­டித்­து­விட்­ட­தா­க­வும் அர சாங்கப் படையினர் கூறி­யுள்ள­னர்.

இதற்­கிடையே, போரா­ளி­கள் கிழக்கு அலெப்­போ­வில் உள்ள அவர்­க­ளது தள­ப­தி­களு­டன் தொடர்பு கொள்­வதற்­கான வழி­முறை­களை ஏற்­படுத்­தி­யுள்­ள­னர் என இங்­கி­லாந்தைச் சேர்ந்த ஆர்­வ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அங்கு நுழை­வதற்­கான பாது­காப்­பான வழியை போரா­ளி­கள் இன்னும் அமைக்­க­வில்லை என் றும் அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர். போரா­ளி­களின் வச­மி­ருந்த அலெப்­போ­வின் பகு­தி­களை அர­சாங்கப்­படை­கள் சென்ற மாதம் கைப்­பற்­றின. சுமார் 250,000 சிரிய மக்கள் அந்தப் பகு­தி­யில் அரசுப் படை­களின் முற்­றுகை­யின்­கீழ் இருந்த­னர். இதற்­கிடையே, சிரி­யா­வின் முக்கிய நக­ர­மான மன்பிஜை அமெ­ரிக்­கப் படை­களின் உதவி­ யு­டன் குர்திய வீரர்­கள் கைப்­பற்­றி­ யுள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி ­யா­கி­யுள்­ளன.

அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த சிரிய மக்கள், போராளிகள் அந்த முற்றுகையைத் தகர்த்த தகவலறிந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர். படம்: ஏஎஃப்பி